Paristamil Navigation Paristamil advert login

மாலத்தீவுகளுக்கான துருக்கிய ட்ரோன்கள் 

மாலத்தீவுகளுக்கான துருக்கிய ட்ரோன்கள் 

10 பங்குனி 2024 ஞாயிறு 08:31 | பார்வைகள் : 5606


கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியுள்ளது.

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். 

சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டிய அவர் அந்நாட்டுடன் ராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக ராணுவ டிரோன்கள் மாலத்தீவுக்கு கொண்டு வரப்பட்டன.

அந்த டிரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

விரைவில் டிரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்படுகிறது. 

எத்தனை டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்