கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு அஞ்சலி நிகழ்வு!

10 பங்குனி 2024 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 6189
கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் அந்த நாட்டைச் சேர்ந்தடைந்த பின்னர் இறுதிச் சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பர்ஹாவன்என்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் அஞ்சலி நிகழ்வு நேற்று பிற்பகல் இடம்பெற்றது.பர்ஹாவன் பிரதேசவாசிகளால் இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.