Paristamil Navigation Paristamil advert login

ஒரே மாதத்தில் 67,28,000 கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப்! 

ஒரே மாதத்தில் 67,28,000 கணக்குகளை தடை செய்த வாட்ஸ்அப்! 

10 பங்குனி 2024 ஞாயிறு 13:38 | பார்வைகள் : 1828


வாட்ஸ்அப் நிறுவனம் சனவரி மாதத்தில் மட்டும் 67,28,000 கணக்குகளை தடை செய்ததாக தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் 500 மில்லியன் மக்கள் வாட்ஸ்அப் கணக்கை வைத்துள்ளனர். இவற்றில் கடந்த சனவரி மாதம் 67,28,000 கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது.

இந்த நடவடிக்கை 1ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை என ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, எந்தவொரு புகார் எழுவதற்கு முன்பாக 13,58,000 கணக்குகளை முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது மாத அறிக்கையின் மூலமாக கூறியுள்ளது. 

மேலும் இதுதொடர்பாக அந்நிறுவனம் கூறுகையில், 

''இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் அது சம்பந்தமாக வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கைகள் அடங்கும்.


அது மட்டுமல்லாமல் வாட்ஸ்அப் தளத்தை தவறாக பயன்படுத்துவதில் இருந்து தடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.

புதிய IT விதிகள் 2021யின் படி கீழ்படியாத காரணத்தினால் 67 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்