குவியலாக கணக்கிட முடியாத தங்கம்... தலைகீழாக புதைக்கப்பட்ட சடலம்: கண்டுபிடிக்கப்பட கல்லறை
10 பங்குனி 2024 ஞாயிறு 14:03 | பார்வைகள் : 2245
பழங்கால கல்லறை ஒன்றை கண்டுபிடித்து திறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அதில் தலைகீழாகப் புதைக்கப்பட்ட சடலத்தையும் குவியல் குவியலாக கணக்கிட முடியாத தங்கத்தையும் மீட்டுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவிலேயே குறித்த பழங்கால கல்லறை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது உயர் பொறுப்பில் இருந்த மத குரு ஒருவரை புதைக்கப்பட்ட கல்லறை என்பதையும் தெரிந்துகொண்டனர்.
தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து 110 மைல்கள் தொலைவில் அந்த கல்லறை அமைந்துள்ளது. அந்த கல்லறையில் குவிக்கப்பட்டிருந்த தங்கத்தின் அளவு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை மலைக்க வைத்துள்ளது.
இதன் பின்னணியில் மோசமான ரகசியம் இருக்கலாம் என்றும் அவர்கள் தற்போது நம்புகின்றனர். மேலும், பெயரிடப்படாத அந்த மதத் தலைவருடன் 32 நபர்களும் புதைக்கப்பட்டுள்ளனர்.
அவர் இறந்த பிறகு அவரை சொர்கத்திற்கு அழைத்துச் செல்ல இவர்கள் உதவுவார்கள் என்று அவர் நம்பியதால் அவருடன் 32 பேர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.
மேலும், அந்த மதத் தலைவர் தலைகீழாக புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மட்டுமின்றி, அந்த கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
தங்க சால்வை, தங்க தொப்பிகள் கொண்ட திமிங்கல பற்கள் உட்பட. குவியல் குவியலாக தங்கம் மீட்கப்பட்டுள்ளது. அந்த மத குருவுடன் புதைக்கப்பட்டவர்கள் பெண்களாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
பொதுவாக உயர் பொறுப்பில் இருக்கும் மதத் தலைவர்களை இறந்த பின்னர் வழி அனுப்பும் சடங்கு அது என்றும் கூறுகின்றனர்.