◉ புயல் பாதிப்பு! - மூவரின் சடலம் மீட்பு! - நால்வரைக் காணவில்லை!
10 பங்குனி 2024 ஞாயிறு 17:35 | பார்வைகள் : 11066
புயல் காரணமாக இதுவரை மூவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Gard மாவட்டத்தின் Gagnières மற்றும் Goudargues நகரங்களில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்ற இயற்கை அனர்த்தங்கள் தென்கிழக்கு மாவட்டங்களை சூறையாடி வருகிறது. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இன்று காலை ஆறு பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் மூவரது சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரும், Ardèche நகரில் காணாமல் போன ஒருவரும் என மொத்தமாக நால்வர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan