74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான மூதாட்டி! முதல் சுழற்சியிலேயே கர்ப்பம்
11 பங்குனி 2024 திங்கள் 10:53 | பார்வைகள் : 1725
74 வயதில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு தாயாகி உலகின் மிக வயதான தாய் என்ற பெயரை இந்திய பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எர்ரமட்டி மங்கம்மா. இவர், உலகின் வயதான தாய் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவர், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐவிஎஃப் (IVF) தொழில் நுட்பத்தின் மூலம் செயற்கை கருத்தரித்தல் முறையில், இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பொதுவாகவே, 50 வயதிற்கு மேல் பெண்கள் கருத்தரிப்பது மிகவும் அரிதான விடயம் தான். ஆனால், 2019 -ம் ஆண்டில் IVF தொழில்நுட்பம் மூலம் கர்ப்பமான எர்ரமட்டி, தற்போது குழந்தைகளை வளர்த்து வருகிறார்.
இதற்கு முன்னதாக, அமிர்தசரஸைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் கில் என்ற சீக்கியர் 72 வயதில் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தையை பெற்றார். தற்போது, வயதான தாய் என்ற பெருமையை எர்ரமட்டி பெற்றுள்ளார்.
மூதாட்டியான எர்ரமட்டி மங்கம்மாவும், அவரது கணவர் சீதாராம் ராஜாராவும் நீண்ட நாட்களாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.
பின்னர், 2019 -ம் ஆண்டில் IVF தொழில்நுட்பம் வந்த பிறகு குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால், எர்ரமட்டியால் முட்டையை வெளியிட முடியவில்லை. பின்னர், கொடையாளரிடமிருந்து முட்டைகள் பெறப்பட்டும், கணவரின் விந்தணு சேகரிக்கப்பட்டும் முதல் சுழற்சியிலேயே எர்ரமட்டி கர்ப்பமானார்.
இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கும் போது அவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏதும் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் 2 கிலோ எடை இருந்தது. குழந்தை பிறந்த ஓராண்டிலேயே கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் 50 வயதை தாண்டியும் IVF மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு தான் எர்ரமட்டிக்கும் நம்பிக்கை வந்தது.