Paristamil Navigation Paristamil advert login

நூல்களை எழுதுவதை விட கோட்டாபய தான் இழைத்த குற்றங்களிற்காக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டும் - பினான்சியல் டைம்ஸ் ஆசிரிய தலையங்கம்

நூல்களை எழுதுவதை விட கோட்டாபய தான் இழைத்த குற்றங்களிற்காக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டும் - பினான்சியல் டைம்ஸ் ஆசிரிய தலையங்கம்

11 பங்குனி 2024 திங்கள் 11:00 | பார்வைகள் : 1947


ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை அகற்றுவதற்கான சதி என்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் நூல் குறி;த்து பலர் தற்போது பேசுகின்றனர் கருத்து வெளியிடுகின்றனர்.

நூலின் பெயர் குறிப்பிடுவது போல பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவரினால் தெரிவிக்கப்படும் அனைத்தும் உண்மைக்கு தொலைவில் இருந்தாலும்  இந்த நூல் சில சுவாரஸ்யமான வாசிப்பை உருவாக்குகின்றது.

இது இந்த அற்ப விடயத்தை எவரும் வாங்கவேண்டும் -தான் ஏற்படுத்திய துயரத்தை நூலாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு தகுதியற்ற நபரை வளப்படுத்துவதற்கான ஒப்புதல் இல்லை 

ராஜபக்சாக்களை வெளியேற்றிய அரகலய அல்லது மக்கள் போராட்டம் தற்போது சதியாக சித்தரிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச வெளியேறவேண்டும் என மாத்திரமல்லாமல்  முழுமையான அமைப்புமுறை மாற்றத்தை முன்னிறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கிய போராட்டம் தற்போது ஒரு வெளிப்படையான சர்வதேச சதி-அந்த நெருக்கடியான தருணத்தில் தூதுவர்கள் இராணுவமுகாம்கள் போன்றவற்றிற்கு சென்று இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடன் உரையாடியதை தவிர இந்த குற்றச்சாட்டுகளை  நிரூபிப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கோட்டபய ராஜபக்சவிடம் அவரின் நிழல் எழுத்தாளர்களிடம் இல்லை.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக இராணுவம் தலையிடவில்லை என்பது யுத்தகுற்றச்சாட்டுகளிற்குள்ளாகியுள்ள  கோட்டாபய ராஜபக்சவை பொறுத்தவரை பாரிய சதியின் ஒரு பகுதி.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்னவும் முப்படை பிரதானி சவேந்திரசில்வாவும் ஆர்ப்பாட்டக்காரகளிற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கோட்டாபய  தனது நூலில் வலியுறுத்துகின்றார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கையாள்வது பொலிஸாரின் கடமை இராணுவத்தினரின் பணியி;ல்லை என்பதை கோட்டாபய ராஜபக்ச இந்த தருணத்திலும் கூட புரிந்துகொள்ளவில்லை.

ஒன்றுகூடுவதற்கான உரிமை கருத்துக்களை வெளியிடுவதற்கான ஆம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை ஒவ்வொரு பொதுமக்களிற்கும் உள்ளது .

இவை இராணுவம் தனது மிகவும் கடுமையான பலத்தை பயன்படுத்தி ஒடுக்கவேண்டிய விடயங்கள் இல்லை.

போர்க்குற்றங்கள் மற்றும்மனித உரிமை மீறல்கள் வரலாற்றை கொண்ட ஜனாதிபதியை ஆதரிப்பதற்கு பதி;ல்  பொறுமையை நிதானத்தை கடைப்பிடிப்பதற்கு இராணுவம் தீர்மானித்தமைக்கான காரணம் எதுவாகயிருந்தாலும் அது இரத்தக்களறியை தடுத்து நிறுத்திய ஒரு சரியான நடவடிக்கை.

போர்க்குற்றச்சாட்டுகளிற்கு அப்பால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக  ஊடகவியலாளர்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை கொலை செய்தல் கடத்தல் சித்திரவதை உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன.அவர் மீது ஊழல் முறைகேடு அரசநிதியை தவறாக பயன்படு;த்திய குற்றச்சாட்டுகளும் உள்ளன.

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன என்றாலும் இந்த வழக்குகள் அரசியல் பேரங்கள் அல்லது பொலிஸ் அல்லது சட்டமா அதிபர் திணைக்கள விசாரணைகளில் நேரடி தலையீடுகள் மூலம் வேண்டுமென்றே முடக்கப்பட்டன.

2022 இல் கோட்டாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டு நாடு திரும்பிய பின்னர் ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்தினால் அவருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறையால் ராஜபக்சகாலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்பது வெளிப்படையான தெளிவாக தெரிகின்ற விடயம்.

முறையான விதத்தில் இயங்கும் ஜனநாயகத்தில் நூல்களை எழுதுவதை விட கோட்டாபய ராஜபக்ச யுத்த குற்றங்கள் பத்திரிகையாளர்களை கொலை செய்தல்  ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் உட்பட    இந்த நாட்டின் மக்களிற்காக அவர் இழைத்த குற்றங்களிற்காக சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டும்.

2022 ஜூலையில் ராஜபக்சாக்களை அகற்றிய பின்னர் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் அரகலயவிற்கு இழைத்த துரோகங்கள் காணமாக முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகவோ அல்லது வேறு எவருக்கும் எதிராகவோ பொறுப்புக்கூறலிற்கான சிறிய நம்பிக்கை கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.

2022 இல் இந்த நாட்டின் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்களால் ஆரம்பிக்கப்பட்டஇந்த மகத்தான போராட்டம் அதன் தோல்விகளுக்கு அப்பால் ஒரு சதி என இழிவுபடுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது.

Alternative facts in a parallel universe

நன்றி வீரகேசரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்