இயக்குநர், நடிகர் சூரியகிரண் திடீர் மரணம்...

11 பங்குனி 2024 திங்கள் 14:48 | பார்வைகள் : 6506
பாக்யராஜ் இயக்கி நடித்த ’மௌன கீதங்கள்’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பிறகு நடிகர் ஆகவும் இயக்குனராகவும் இருந்த மாஸ்டர் சுரேஷ் திடீரென காலமானது திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
சுரேஷ் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களில் மாஸ்டர் சுரேஷ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ திரைப்படத்தில் சிறுவயது ரஜினிகாந்த் கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 200 படங்களில் நடித்துள்ள இவர் ஸ்கிரிப்ட் ரைட்டிங் கற்றுக் கொண்டவர் என்பதும் சூர்யா கரண் என்ற பெயரில் சில படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூர்யா கிரண் கலந்து கொண்டார் என்பதும் இவர் நடிகை காவிரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா கிரண் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025