60 தொன் எடையுடன் பயணிக்கும் கனரக வாகனங்களுக்கு பிரான்சில் அனுமதி??!
12 பங்குனி 2024 செவ்வாய் 07:46 | பார்வைகள் : 5191
25 மீற்றர் நீளமுடைய 60 தொன் எடையை தாங்கிக்கொண்டு பயணிக்கக்கூடிய நீண்ட கனரக வாகனங்களுக்கு (gigaliners) பிரான்சின் அனுமதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வகை நீண்ட கனரக வாகனங்களுக்கு ஐரோப்பா முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அத்தடை நீக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
இதற்கான வாக்கெடுப்பு ஒன்று, இன்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பெரும்பாலும் ஆதரவு வாக்குகளே பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி இதுவரை 44 தொன் அதிகபட்ச எடைகொண்ட 18.75 மீற்றர் எடைகொண்ட வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், விரைவில் 25.25 மீற்றர் நீளம் கொண்ட மிக நீண்ட வாகனங்களை பிரெஞ்சு நெடுஞ்சாலைகளில் காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.