கனடாவில் சிறுவர்களுக்கான புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு
12 பங்குனி 2024 செவ்வாய் 09:18 | பார்வைகள் : 4895
கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் விபத்துக்கள் மூலமாக சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனேடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
மேலும், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருத்துவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மருத்துவ உதவியாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய தொழில்நுட்பம் தற்பொழுது பரீட்சார்த்த மட்டத்தில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.