IPL வரலாற்றில் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியுமா..?
12 பங்குனி 2024 செவ்வாய் 09:29 | பார்வைகள் : 2204
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை கிரிக்கெட் வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2016 ஈம் ஆண்டு வரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார்.
தற்போது, 2016 -ம் ஆண்டு சீசன் இறுதியில் அந்த இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களை மேற்கோள் காட்டி விலகிய விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக களமிறங்குகிறார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே ஆறு சீசன்களில் 500 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.
2011 -ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 557 ரன்களும் , 2013 -ம் ஆண்டு 634 ரன்களும், 2015 ஆம் ஆண்டு 505 ரன்களும், 2016 ஆம் ஆண்டு 973 ரன்களும் விராட் கோலி குவித்துள்ளார்.
அதன்பிறகு 5 ஆண்டுகளில் 500 ரன்களை தொடாமல் 2023 -ம் ஆண்டில் ரன்களை சேர்த்தார்.
இதனால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் ஒரு வீரருக்கு 6 ஆண்டுகள் வேண்டும்.