இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை 1000 ரூபாய்?

12 பங்குனி 2024 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 5594
அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் வெங்காயம் கிலோவொன்றின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் விடுத்துள்ளனர்.
சந்தையில் தற்போது பெரிய வெங்காயம் கிலோவொன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சந்தையில் தற்போது பெரிய வெங்காயத்துக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானினால் தமது ஏற்றுமதி பொருட்களுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெங்காய இறக்குமதி முடங்கியுள்ளது.
இந்தநிலையில், பெரிய வெங்காய விலையை சீராக பேண வேண்டுமாயின் இந்தியாவில் இருந்து அவை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.