தனுஷூக்கு வில்லனாகும் நாகர்ஜூனா?
12 பங்குனி 2024 செவ்வாய் 14:04 | பார்வைகள் : 11709
தனுஷின் 51வது படமான 'குபேரா' படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதில் தனுஷூடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா,நாகார்ஜூனா, ஜிம் சார்ப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இந்த படத்தில் நாகார்ஜூனா நடிக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாகர்ஜூனா விசாரணை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் .இந்த கதாபாத்திரத்தில் வில்லதனம் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ் இப்படத்தில் பிச்சைக்காரனாக தோன்றி பின்னர் பெரும் அரசியல் தலைவராக மாறுவார். இதை நோக்கி கதை நகரும் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan