தண்ணீர் பஞ்சம்., பெங்களூரு IPL போட்டிகள் மாற்றம்?
13 பங்குனி 2124 திங்கள் 09:21 | பார்வைகள் : 1592
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை நகரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB அணியின் 3 போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்தப் போட்டிகள் மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
குழு உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தி முடிவெடுப்போம் என்று KSCA மேலாண்மை வாரியம் தெளிவுபடுத்தியது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் ஒரு போட்டி நடத்த சுமார் 10,000 முதல் 15,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒவ்வொரு வழக்கமான பராமரிப்புக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆனால் தற்போது பெங்களூரு நகரம் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெரும் அவதியில் உள்ளது.
தண்ணீரின்றி மக்கள் சிரமப்படும் நிலையில் அதிக தண்ணீரை பயன்படுத்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது ஏற்புடையதல்ல என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகிறது.
இருப்பினும், ஸ்டேடியம் நிலத்தடி தண்ணீரை பெரிதும் சார்ந்து இல்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் புல் படுக்கையை வளர்ப்பது உட்பட மைதானத்தின் ஒட்டுமொத்த பராமரிப்புக்கும் சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் போட்டிகள் திட்டமிடுவதில் சிக்கல் இருக்காது என்ற வாதம் கேஎஸ்சிஏ வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
தண்ணீர் பிரச்சினையால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது மாற்றுவதா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கமிட்டி உறுப்பினர்களுடன் விரைவில் கூட்டம் நடத்தி உரிய முடிவு எடுப்போம் என்று கேஎஸ்சிஏ சிஇஓ சுபேந்து கோஷ் தெரிவித்தார்.