சாள்-து-கோல் விமான நிலையதின் 50 ஆவது ஆண்டு நிறைவு நாள்!

13 பங்குனி 2024 புதன் 12:00 | பார்வைகள் : 11788
50 ஆண்டுகளின் முன்னர், மார்ச் 13 ஆம் திகதி 1974 ஆம் ஆண்டு, காலை 6 மணிக்கு Boeing 747 விமானம் ஒன்று சாள்-து-கோல் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியது. இந்த விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலாவது விமானம் இதுவாகும். அது எங்கிருந்து வந்தது..?!!
இந்த விமானம் வந்தடைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், மார்ச் 8 ஆம் திகதி பிரதமர் Pierre Messmer இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் ஐந்து நாட்கள் கழித்து மேற்குறித்த விமானம் வந்தடைந்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து அந்த விமானம் வந்தடைந்து வரலாற்றில் பதிவானது.
இன்று, 50 ஆண்டுகளின் பின்னர் விமான நிலையம் 3,200 ஹெக்டேயர்களாக விரிவடைந்துள்ளது. ஆண்டுக்கு 70 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்.
ஐரோப்பாவில் உள்ள ஆறாவது மிகப்பெரிய விமான நிலையம் இதுவாகும்.
இன்று அது தனது 50 ஆவது அகவையை கொண்டாடுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1