Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக Sciences-Po கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக Sciences-Po கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்! - ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

13 பங்குனி 2024 புதன் 13:45 | பார்வைகள் : 10427


பரிசில் உள்ள Sciences-Po கல்லூரி வளாகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.. 

”சொல்ல முடியாத முற்றிலும் சகிக்க முடியாத செயல்’ என அதனை வர்ணித்த ஜனாதிபதி மக்ரோன், ”ஆம், பல்கலைக்கழக நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவை. ஆனால் இந்த சுயாட்சி பிரிவினைவாதத்தின் சிறிதளவு தொடக்கத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்தக்கூடாது!” எனவும் அவர் தெரிவித்தார்.

Sciences-Po வளாகத்தில் உள்ள amphitheater  அரங்கில் நேற்று மார்ச் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடிய மாணவர்கள் சிலர்,. காஸாவில் கொல்லப்படும் மக்களையும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் வெளியிட்டனர். அதையடுத்தே ஜனாதிபதி மக்ரோன் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்