கனடா செல்ல விரும்பாத யாழ் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

13 பங்குனி 2024 புதன் 15:39 | பார்வைகள் : 7726
கனடா செல்ல விரும்பாத மாற்று திறனாளி ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மாற்று திறனாளியே தனது உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த நபரின் சகோதரி , கனடா நாட்டில் வசித்து வரும் நிலையில் , மாற்று திறனாளியான தனது சகோதரனையும் , தனது தாயாரையும் விசிட் விசா மூலம் கனடா நாட்டிற்கு அழைக்க முற்பட்ட நிலையில் , இருவருக்கும் விசா கிடைத்துள்ளது.
ஆனால் தான் கனடா வர மாட்டேன் என மாற்று திறனாளியான இளைஞன் கூறி வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025