◉ Aubervilliers : காவல்துறை மகிழுந்துடன் மோதிய ஸ்கூட்டர்! - இருவர் மருத்துவமனையில்..!

14 பங்குனி 2024 வியாழன் 06:00 | பார்வைகள் : 10204
ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த இருவர் காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதிய நிலையில், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மார்ச் 13 ஆம் திகதி புதன்கிழமை இச்சம்பவம் Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 7.20 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணிந்த இருவர் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நிலையில், La Courneuve நகரில் வைத்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதன் பின்னரே Aubervilliers பகுதியில் வைத்து மகிழுந்துடன் மோதுண்டுள்ளனர்.
இதில் இருவரும் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு காவல்துறையினரான l'inspection générale de la police nationale (IGPN) இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1