விளாடிமிர் புட்டின் நாட்டுக்கு அச்சுறுத்தாலாக இருக்கிறார் - பிரெஞ்சு மக்கள் கருத்து!
14 பங்குனி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 6713
இரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பிரான்சுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என பத்தில் ஆறு பிரெஞ்சு மக்கள் நம்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
61% சதவீதமான மக்கள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர். இரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் பிரான்ஸ் உக்ரேனின் சார்பாக இருக்கும் நிலையில், ‘அணு ஆயுத தாக்குதலுக்கு எம்மை பிரான்ஸ் தள்ளுகிறது!’ என விளாடிமிர் புட்டின் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
NATO சார்பு நாடுகள் மீது புட்டின் தாக்குதல் நடத்துவார் எனவும், பிரான்சுக்கு அவர் அச்சுறுத்தலாக இருப்பார் எனவும் 61% சதவீதமான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
24% சதவீதமான மக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.
*இந்த கருத்துக்கணிப்பை Elabe நிறுவனம் BFMTV தொலைக்காட்சிக்காக மேற்கொண்டிருந்தது.