Paristamil Navigation Paristamil advert login

WhatsApp செயலியில் அசத்தலான வசதி....

WhatsApp செயலியில் அசத்தலான வசதி....

14 பங்குனி 2024 வியாழன் 08:22 | பார்வைகள் : 1638


குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் WhatsApp செயலி அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் எளிய முறையில் இந்த செயலி இருப்பதால், பயனாளர்கள் மத்தியில் WhatsApp செயலிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

Meta நிறுவனம் WhatsApp அவ்வப்போது புது புது அம்சங்களை கொண்டுவந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்தவகையில், WhatsApp பயனர்களுக்கு புதிய வசதியை Meta நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

அதன்படி, தனிப்பட்ட Chat-களை போல Channel-களிலும் Voice Message அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், Channel-களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் நேரடியாக தங்களில் Status-களில் பதிவிடும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில், ஒருவர் WhatsApp Video Call-ல் பேசிக் கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் Audio-வை எதிரில் இருப்பவர் கேட்கும்படி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்