கொழும்பு துறைமுக நகரில் திறக்கப்பட்டுள்ள செயற்கை கடற்கரை
16 ஆடி 2023 ஞாயிறு 03:05 | பார்வைகள் : 10686
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நேற்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும் என்பதோடு நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது. இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan