தளபதி 69' இயக்குநரை முடிவு செய்த விஜய்...

14 பங்குனி 2024 வியாழன் 08:39 | பார்வைகள் : 9123
நடிகர் விஜய் தனது கடைசி படமாக சொன்ன ‘தளபதி 69’க்கான இயக்குநரை இறுதி செய்து விட்டார். அதுவேறு யாரும் இல்லை அட்லிதான் அது. இப்போது தீவிர கதை டிஸ்கஷனில் இறங்கி இருக்கிறார். இந்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்ததும் அவரது கடைசிப் படம் என சொல்லப்படும் ‘தளபதி 69’ படத்தின் இயக்குநர் யார் என்பதுதான் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. வெற்றிமாறன், கார்த்திக் சுப்பாராஜ் எனப் பல இயக்குநர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், ஜாக்பாட் அடித்தது என்னவோ அட்லிக்குதான்.
ராஜா ராணி’ மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்த அட்லி விஜயை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தார். பின்பு விஜய் உதவியுடன் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படம் இயக்கி மாஸ் காட்டினார். இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் அட்லி பெயரும் இருக்கிறது.
இப்படியான சூழ்நிலையில்தான் அட்லி ‘தளபதி 69’ படத்திற்கு கமிட் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக இருப்பதால், அதை ஒட்டியே கதைக்களம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கான் இந்தப் படத்தில் கேமியோகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘செஞ்சா என் அண்ணனுக்கு நான் தான் செய்வேன்’ என பஞ்ச் அடிக்கும் அட்லி விஜயின் 69வது படத்திற்காக இப்போது தீவிர டிஸ்கஷனில் குடும்பத்துடன் இறங்கி இருக்கிறார்.
தனது மனைவி ப்ரியா, மகன் மீர் மற்றும் தன்னுடைய டீமுடன் டிஸ்கஷனில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு, ‘என்னுடைய ஆறாவது படத்திற்கு ரெடியா?’ என ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். இது நடிகர் விஜயின் ‘தளபதி 69’ படத்திற்காகவா அல்லது மீண்டும் பாலிவுட் படத்திற்கானதா என்பது சீக்கிரம் தெரிய வரும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025