வாரம் 500,000 பவுண்டுகள் சம்பளம்... மார்கஸ் ராஷ்ஃபோர்டுக்கு குறிவைக்கும் பிரபல அணி
14 பங்குனி 2024 வியாழன் 09:13 | பார்வைகள் : 6497
மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்டை எந்த விலைக் கொடுத்தும் வாங்கும் முடிவுடன் Paris-Saint Germain அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.
அடுத்த கால்பந்து தொடர் தொடங்கும் முன்னர் எப்படியாவது மார்கஸ் ராஷ்ஃபோர்டை அணியில் சேர்த்துக்கொள்ளும் வகையில், 80 மில்லியன் பவுண்டுகள் வரையில் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த கோடையில் தான் யுனைடெட் நிர்வாகத்துடன் புதிய 5 ஆண்டுகள் ஒப்பந்தம் ஒன்றை 350,000 பவுண்டுகளுக்கு மார்கஸ் ராஷ்ஃபோர்ட் இறுதி செய்தார்.
இதனால், 2027 வரையில் அவர் யுனைடெட் அணியில் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் களத்திலும் வெளியேயும் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் சிக்கலில் உள்ளார்.
இதனாலையே யுனைடெட் அணியை விட்டு மார்கஸ் ராஷ்ஃபோர்ட் விலக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தனது முழுத்திறமையை மீண்டெடுக்க அவர் தடுமாறி வருகிறார்.
அணி நிர்வாகத்துடனும் மோதலில் உள்ளார்.
தாம் யுனைடெட் அணியுடன் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் PSG தரப்பு அவரை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளவே போராடி வருகிறது.
இதனால் வாரத்திற்கு 500,000 பவுண்டுகள் வரையில் சம்பளமாக அளிக்கவும் PSG தரப்பு தயாராக உள்ளது.
மேலும், இந்த சீசனில் 34 ஆட்டங்களில் களமிறங்கி வெறும் ஏழு கோல்களை மட்டுமே மார்கஸ் ராஷ்ஃபோர்ட் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan