காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு
14 பங்குனி 2024 வியாழன் 09:33 | பார்வைகள் : 4796
கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ” காசாவில் இடம்பெற்று வரும் இப் போரானது குழந்தைகளின் மீதான போர் என்றும் அவர்களின் எதிர்காலத்தின் மீதான போர் எனவும்,
இந்தப் போர் தொடங்கி 3 வாரங்களிலேயே 3,600 பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் பெற்றோராக இருப்பது ஒரு பெரும் சாபம் எனத் தெரிவித்த அவர் காசாவில் இதுவரை 31,184 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும்,
இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றம் குழந்தைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.