10000 டொலர் சன்மானம் அறிவித்த கனடிய பெண், எதற்கு தெரியுமா?
14 பங்குனி 2024 வியாழன் 09:35 | பார்வைகள் : 2491
தனது பூனைக் குட்டியை கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு பத்தாயிரம் டொலர் சன்மானம் வழங்குவதாக கனடிய பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
ரொறன்ரோவின் காஸா லோமா பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பூனை காணாமல் போயுள்ளது.
மிக்கா என்ற ஒன்பது மாதங்கள் வயதான பூனையொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இரவு பகலாக இந்தப் பூனையை தேடி வருவதாக குறித்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனது செல்லப் பிராணியை கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பூனையின் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகளை ஒட்டி குறித்த பெண் தனது செல்லப் பிராணியை தேடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.