Paristamil Navigation Paristamil advert login

இடது கை பழக்கம் உண்டாவது ஏன் தெரியுமா...?

இடது கை பழக்கம் உண்டாவது ஏன் தெரியுமா...?

14 பங்குனி 2024 வியாழன் 10:13 | பார்வைகள் : 2479


இடதுகை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..!

இடதுகை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.

வலதுகை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரி சதவீதத்தில் இடதுகை பழக்கமுள்ளவர்கள்தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், பில்கேட்ஸ், லியோனார்டோ டாவின்சி என இந்த பட்டியல் நீள்கிறது. உடல் அளவிலும், மனதளவிலும் சமநிலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால்தான் இவர்கள் மேலோங்கி வளர்கிறார்களாம்.

அதேபோல வலதுகை பழக்கமுள்ளவர்களால் இடதுகையில் வேலை செய்வது கடினம். ஆனால், இடதுகை பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையிலும் வேலை செய்கிறார்கள் எனவும் கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் ரீதியாகவே இடது கை பழக்கம் உள்ளவர்கள் புத்திசாலிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள செயின்ட் லாரன்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.க்யூ அளவு 140-க்கு மேல் உள்ளவர்களில் அதிகமானவர்கள் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் தான். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின் மற்றும் பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அனைவரும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள்தான்.

இடதுகை பழக்கம் உள்ளவர்களது மூளை சிறப்பாக செயல்படுகிறதாம். இதனால் இவர்கள் மல்டி டாஸ்கிங்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது. தண்ணீருக்கு கீழேயும் கூட, இவர்களுக்கு நல்ல பார்வைத் திறன் இருக்கிறது.

ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவர் இடது கை பழக்கம் உடையவர் என தீர்மானிக்கப்படுவதாகவும், அது நம் உயிரியலில் கலந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தகவல் கூறிகிறது. நாம் அதிகமாக பயன்படுத்தும் கைகளுக்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நம் முதுகுத்தண்டில் உள்ள சில தனித்துவமிக்க மரபணு செயல்பாடுதான் இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு வரை, மூளையின் எந்த பக்கம் அதிக செயல்பாட்டோடு இருக்கிறதோ, அதை பொறுத்துதான் ஒரு நபர் வலது கை பழக்கம் உள்ளவரா அல்லது இடது கை பழக்கம் உள்ளவரா என்பது தீர்மானிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது வந்துள்ள ஆய்வின் முடிவு இந்த கருத்தை தகர்த்துள்ளது. கர்ப்பமடைந்து 8 முதல் 12 வாரத்திற்கு இடைபட்ட காலத்தில் கருவில் இருக்கும் குழந்தைக்கு முதுகுத்தண்டு வளர ஆரம்பிக்கும். இந்த ஆய்விற்காக கருவில் உள்ள குழந்தைகளை மிக நெருக்கமாக கண்காணித்து வந்தனர் ஆய்வாளர்கள்.

நமது அசைசவுகளை மூளை கட்டுப்படுத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கைகள் தொடங்கிவிடுவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. நமது முதுகுத்தண்டில் உள்ள பகுதிகளே நம்முடைய கைகள், கால்கள் மற்றும் பாதங்களுக்கு சிக்னல் கொடுக்கிறது. நாம் வலது கையில் எழுதப் போகிறோமா அல்லது இடது கையிலா என்பதை இந்த செயல்பாடுதான் தீர்மானிக்கிறது.

தாயின் கருவிற்குள் குழந்தை இருக்கும் போதே, வெளிப்புற காரணிகளின் தூண்டுதல் இதற்கு காரணமாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர். நொதிகள் எப்படி இயங்க வேண்டும் என மாற்றக்கூடிய ஏதோவொரு விஷயம் குழந்தையை சுற்றி இருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். நொதிகளின் செயல்பாட்டையே மரபணுக்களும் பின்பற்ற தொடங்குகிறது.

முதுகுத்தண்டில் தனித்துவமான மரபணு செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். எதிர்காலத்தில் ஒரு குழந்தை இடது கை பழக்கமா அல்லது வலது கை பழக்கமா என்பதை இவைதான் தீர்மாணிக்கிறது.

மேலும், கருவில் உள்ள குழந்தை பெருவிரலை வாயில் வைத்து சப்பும் பழக்கத்திற்கும், அக்குழந்தை இடது கை அல்லது வலது கை பழக்கம் உடையதா என்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதற்காக கருவில் இருக்கும் 274 குழந்தைகளை ஆய்வு செய்த போது, 13-வது வாரத்தில் 90 சதவீதம் கருவில் உள்ள குழந்தைகள் தங்களது வலது கை பெரு விரலை வாயில் வைக்கின்றன.

அதேசமயத்தில் வெறும் 10 சதவீதம் கருக்களே தங்களது இடது கை விரலை வாயில் வைக்கின்றன. இதே குழந்தைகள் பிறந்ததும், கருவில் இருக்கும் போது வலது கையை பயன்படுத்திய 60 குழந்தைகள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடது கையை பயன்படுத்திய 15 குழந்தைகளில் ஐந்து பேர் தற்போது வலது கை பழக்கம் உடையவர்களாகவும் பத்து பேர் இடது கை பழக்கம் உடையவர்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்