டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
14 பங்குனி 2024 வியாழன் 10:25 | பார்வைகள் : 6169
உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance).
இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு செயலிகளும் பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நடைமுறை சாத்தியமான உளவு நடவடிக்கை என சில நாடுகள் குற்றம்சாட்டின.
மேலும் இது நாட்டிற்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவித்தன.
இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கடந்த 2020-ல் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன.
அமெரிக்காவின் சில மாநிலங்கள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன.
மேலும், அமெரிக்கா முழுவதும் இந்த செயலியை தடைவிதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.
அப்போது அமெரிக்கா சார்பில் டிக்டாக் செயலியை சீன நிறுவனம் விற்பனை செய்தால் அமெரிக்காவில் செயல்பட தடையில்லை எனத் தெரிவித்தது.
ஆனால் குற்றச்சாட்டுகளை டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனம் மறுத்து வந்தது.
அதன்பின் டிக்டாக் செயலி தடை குறித்து மிகப்பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் டிக்டாக் தடை குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தனர்.
இதனால் பாராளுமன்றத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டது.
அதன்படி நேற்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 352 பேர் வாக்களித்தனர். 65 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா சென்ட் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்பட்டு அதிபரின் கையெழுத்திற்கான வெள்ளை அனுப்பப்படும். அதிபர் கையெழுத்திட்டதும் டிக்டாக் செயலி தடை செய்யப்படும்.
டிக்டாக் செயலின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) டிக்டாக் செயலில் இருந்து விலக வேண்டும்.
இல்லையெனில் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் என அந்த மசோதா குறிப்பிடுகிறது.
டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடந்து செயல்பட வேண்டுமென்றால் பைட்டான்ஸ் அதனை விற்பனை செய்ய வேண்டும்.
இதற்கு முன்னதாக 2020-ல் டொனால்டு டிரம்ப் இந்த செயலிக்கு தடைவிதிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றம் தலையீடு காரணமாக அது வெற்றி பெற முடியாமல் போனது.