மோல்டோவா, ருமேனியா, போலந்து போன்ற நாடுகளுக்கு ஆபத்து! - ஜனாதிபதி கருத்து!
15 பங்குனி 2024 வெள்ளி 10:12 | பார்வைகள் : 5954
‘போரில் உக்ரேன் தோற்றால், அது அருகில் உள்ள நாடுகளுக்கு ஆபத்தாக முடியும்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
’இன்று உக்ரேனின் நிலப்பரப்புக்காக யுத்தமிடுகிறது. நாளை மோல்டோவா, ருமேனியா, போலந்து நாடுகளிலும் தனது யுத்தத்தை இரஷ்யா ஆரம்பிக்கும். இந்த யுத்தத்தில் இரஷ்யாவை வெற்றிபெறச் செய்யாமல் தடுப்பது அவசியமானதாகும்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் காணொளி ஒன்றில் தெரிவித்தார்.
நேற்று மார்ச் 14 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை தொலைக்காட்சி நேர்காணலில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது X சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட சிறிய காணொளி ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டார்.