Paristamil Navigation Paristamil advert login

நல்லூர் ஆலய திருவிழாவில் அமுலாகும் தடை

நல்லூர் ஆலய திருவிழாவில் அமுலாகும் தடை

9 ஆவணி 2023 புதன் 10:45 | பார்வைகள் : 7018


நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களுடன் யாசகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம், மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் இதன்போது, ஆராயப்பட்டதுடன், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறுவர்களுடன் யாசகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த தீர்மானம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அறியப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சகல தனியார் கல்வி நிறுவனங்களின் விபரங்களை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில் சேகரிக்கப்படும் விபரங்களை அடிப்படையாகக் கொண்டு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கான பொறிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை தயாரிப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்