Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் ஆங்கிலத் தலைப்பின் ரகசியம் என்ன?

அஜித்தின் ஆங்கிலத் தலைப்பின்  ரகசியம் என்ன?

15 பங்குனி 2024 வெள்ளி 12:32 | பார்வைகள் : 2417


’குட் பேட் அக்லி’ என தனது 63 ஆவது படத்திற்கு டைட்டில் டிக் செய்துள்ளார் நடிகர் அஜித்குமார். ‘வலிமை’, ‘துணிவு’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘விடாமுயற்சி’ என இவ்வளவு நாள் தனது படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்து வந்த அஜித், இப்போது இந்த ஆங்கில டிரெண்டுக்குத் தாவியதற்குப் பின்னால் ஒரு சென்டிமென்ட் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ்ப் படங்களுக்கு தற்போது அதிக அளவில் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதைப் பார்த்து வருகிறோம். தமிழ் படங்களுக்கு தமிழில் தான் தலைப்பு வைக்க வேண்டும் என்ற விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இடையில், தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தால் வரி விலக்கு என்று கூட அறிவிக்கப்பட்டது. ஆனால், பான் இந்தியா கலாச்சாரம் தலை தூக்கிய பின்பு ஆங்கிலத்தில் தமிழ் படங்களுக்குப் பெயர் வைப்பது இன்னும் அதிகமாகிவிட்டது.

அப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால்தான் பலதரப்பட்ட ரசிகர்களை எளிதாக சென்றடைய முடியும் என்பதும் இவர்களுடைய விவாதமாக இருக்கிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’, ‘லியோ’ எனத் தொடர்ச்சியாகத் தனது படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரைப் போலவே நடிகர் அஜித்தும் இப்போது ஆங்கிலத்தில் தலைப்பு வைக்க ஆர்வம் காட்டியிருக்கிறார். இதனாலேயே, ‘குட் பேட் அக்லி’ என ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் தனது 63-வது படத்திற்குத் தலைப்பை டிக் செய்திருக்கிறார். தனது படங்களுக்கு தமிழ் பெயர்களையே பெரும்பாலும் டிக் செய்த அஜித் 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கில தலைப்புக்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

இதற்கு முன்பு, ரெட்’, ‘சிட்டிசன்’ என ஆங்கிலத்தில் தலைப்புல் வந்த அஜித்தின் படங்கள் இப்போது வரை ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. மேலும், பான் இந்திய கலாச்சாரத்தில் அஜித் இணையவும் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதே சரியாக இருக்கும் என்பதாலேயே ஆங்கில தலைப்புக்கு அஜித் ஓகே சொல்லி இருப்பார் என ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்