Paristamil Navigation Paristamil advert login

ஜேமனியில் ஜனாதிபதி மக்ரோன்! - இரஷ்யா குறித்து மீண்டும் வலியுறுத்தல்!!

ஜேமனியில் ஜனாதிபதி மக்ரோன்! - இரஷ்யா குறித்து மீண்டும் வலியுறுத்தல்!!

15 பங்குனி 2024 வெள்ளி 18:15 | பார்வைகள் : 11167


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது ஜேமனிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு வைத்து ஜேமனியின் சான்சிலர் (Chancellor)  Olaf Scholz, மற்றும் போலந்து நாட்டின் பிரதமர் Donald Tusk ஆகியோரைச் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில் உக்ரேனில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இரஷ்யா இந்த யுத்தத்தில் வெற்றி பெறாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் குறித்து உரையாடப்பட்டது.

அதன் முடிவில் மூவரும் ஊடக சந்திப்பில் ஈடுபட்டனர். 

அதன்போது, இரஷ்யா மீதான அழுத்தம் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில், “முதல் நாளிலிருந்து நாங்கள் செய்ததைப் போலவே நாங்கள் தொடர்வோம், எந்தவொரு அதிகரிப்புக்கும் முன்முயற்சி எடுக்க மாட்டோம்” என தெரிவித்தார். மேலும், “உக்ரைனுக்கும் அதன் மக்களுக்கும் தேவைப்படும் வரை தொடர்ந்து ஆதரவளிப்போம்” எனவும் குறிப்பிட்டார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்