உணவக முற்றங்கள் நள்ளிரவு வரை திறக்க அனுமதி!!
16 பங்குனி 2024 சனி 07:41 | பார்வைகள் : 11878
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் பரிசில் உள்ள உணவகங்கள் தங்களது முற்றங்களை (terraces) நள்ளிரவு வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தின் போது இரவு 10 மணிவரை வழங்கப்படும் இந்த அனுமதி, இம்முறை நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த அனுமதி (ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம்) வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு கோடைகாலத்தின் போது 4,000 வரையான உணவகங்களுக்கு இந்த 'முற்றங்கள்' அமைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan