Euromillions : €130 மில்லியன் யூரோக்களை வென்ற நால்வர்!!
16 பங்குனி 2024 சனி 09:48 | பார்வைகள் : 18370
யூரோமில்லியன் (Euromillions) அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் நால்வர் இணைந்து €130 மில்லியன் யூரோக்களை வென்றுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இந்த சீட்டிழுப்பு இடம்பெற்றது. பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நால்வர் இந்த வெற்றித்தொகையை பெற்றுள்ளனர். இவர்களில் 1, 4, 31, 34, 40 ஆகிய ஐந்து இலக்கங்களை சரியாக கணித்த பிரெஞ்சு நபர் €420,494.80 யூரோக்களை வென்றுள்ளார். வெற்றிபெற்ற நபர் அடுத்த 90 நாட்களுக்குள் அவரது பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ மில்லியன் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு ஐரோப்பாவின் ஒன்பது நாடுகளில் விற்பனையாகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனியாக €230 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan