Évry : தபாலகத்தில் கொள்ளை! - ₤150,000யூரோக்கள் பணத்துடன் தப்பிய இருவர்!
16 பங்குனி 2024 சனி 14:12 | பார்வைகள் : 18333
Évry (Essonne) நகரில் உள்ள தபாலகம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுத்தத்துடன் நுழைந்த இரு கொள்ளையர்கள் ₤150,000யூரோக்கள் பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று மார்ச் 15, வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. kஆலை 9.15 மணி அளவில் இரு கொள்ளையர்கள் முகக்கவசம் அணிந்து, பிஸ்டல் வகை துப்பாக்கிகளுடன் தபாலகத்துக்குள் நுழைந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த இரு ஊழியர்களை (ஒருவர் துப்பரவு பணியாளர், ஒருவர் தபாலக ஊழியர்) அச்சுறுத்தி இரண்டு பணத்தாள்கள் கொண்ட பெட்டிகளை கொள்ளையிட்டனர்.
பெட்டி ஒன்றில் 77,000 யூரோக்கள் இருந்ததாகவும், இரண்டாவது பெட்டியிலும் அதே அளவு பணம் இருந்ததாகவும், மொத்தமாக ₤150,000 பணத்தினை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையர்கள் தப்பிச் செல்ல, தபாலகத்துக்கு வெளியே வாகனத்தில் ஒருவர் காத்திருந்ததாக அறிய முடிகிறது. மேற்படி சம்பவம் தொடர்பில் அப்பகுதி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan