Paristamil Navigation Paristamil advert login

மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவில் பொலிசாருக்கும் வாகனங்களும் தடை

மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவில் பொலிசாருக்கும் வாகனங்களும் தடை

16 பங்குனி 2024 சனி 14:23 | பார்வைகள் : 3766


கொலம்பியா கடற்பகுதியில் அமைந்துள்ள Santa Cruz del Islote என்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட  தீவு ஆகும்.

நான்கு சாலைகள், வெறும் 45 குடும்பங்கள், மொத்தமாக 1,200 பேர்கள் வசிக்கும் இந்த தீவில், பொலிசாருக்கும் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 97 குடியிருப்புகளில் மொத்த மக்களும் வசிக்கின்ற நிலையில் அடுத்த தெருவுக்கு நடந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்லது சிறிய படகை பயன்படுத்துகின்றனர். 

குடியிருப்புகள் எதுவும் பூட்டப்படுவதில்லை என்பதுடன், இதுவரை கொள்ளை சம்பவங்களோ குற்றச்செயல்களோ எதுவும் பதிவாகவில்லை.

அனைவருமே ஒருவகையில் உறவினர்கள் என்பதால், குற்றச்செயல்களுக்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். 

 விசித்திரமானதும் கடுமையான விதிகளை பின்பற்றுகின்றனர்.

இறப்பவர்களை அருகாமையில் உள்ள தீவு ஒன்றில் அடக்கம் செய்கின்றனர். எந்த குடியிருப்புக்கும் கழிவறை என்பதே இல்லை. 

சூரிய ஒளி மின்சாரத்தை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர்.

இருப்பினும் ஜெனரேட்டர் ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர். குடிநீருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கும் சிக்கல் இருப்பதாகவே கூறுகின்றனர். 

மீனவ மக்கள் என்பதால், அதை நம்பியே பெரும்பாலானோர் உள்ளனர். சுற்றுலா பயணிகளாலும் வருவாய் ஈட்டுகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்