இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்கள்

9 ஆவணி 2023 புதன் 14:24 | பார்வைகள் : 10621
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 93,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியினால் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, புத்தளம், குருணாகல், பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் கடும் வறட்சி காரணமாக வெவ்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அடிக்கடி நீர் அருந்துமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் G.விஜேசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.