வடகிழக்கு மக்கள் தமிழில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்க சந்தர்ப்பம்!

16 பங்குனி 2024 சனி 17:04 | பார்வைகள் : 5189
வடகிழக்கு மக்கள் தமிழில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்க 107 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரினால் வவுனியாவில் இந்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.