வாகன காப்புறுதிகளில் மாற்றம்!
16 பங்குனி 2024 சனி 17:40 | பார்வைகள் : 6487
வாகன காப்புறுதி தொடர்பில் சில மாறுதல்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இதுவரை வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருந்த பச்சை நிறத்திலான காப்புறுதி காகிதம், இனிமேல் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன காப்புறுதிகளை பார்வையில் படும்படி வாகன கண்ணாடியில் ஒட்டத்தேவையில்லை. மாறாக உங்களிடம் காப்புறுதி இருந்தால் மட்டும் போதும். அதனை தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனம் ஒன்றில் வைத்திருந்தாலே போதுமானது.
வாகனங்களுக்கு காப்புறுதி எடுக்கப்படும் போது அது தானியங்கி முறையில் Fichier des véhicules assurés (FVA) கோப்புகளில் சேமிக்கப்படும். அதன் விபரங்களை வீதி கண்காணிப்பில் ஈடுபடும் காவல்துறையினர் அல்லது ஜொந்தாமினர் பார்வையிட முடியும். வரும் ஏப்ரல் 1 ஆம் திகதியில் இருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
எவ்வாறாயினும், வாகனங்களுக்கு காப்புறுதி அவசியமானதாகும்.
பிரான்சில் 680,000 வாகனங்கள் காப்புறுதி இன்றி பயணிப்பதாக புள்ளிவிபரம் ஒன்று குறிப்பிடுகிறது.