Val-d'Oise : பள்ளிவாசலுக்கு முன்பாக மோதல்! - மூவர் காயம்!
16 பங்குனி 2024 சனி 21:00 | பார்வைகள் : 12533
Val-d'Oise மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. Goussainville (Val-d'Oise) நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் முன்பாக கூடிய 30 வரையான இளைஞர்கள் குழு மோதலில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் மோசமாக தாக்கிக்கொண்டனர். கத்தி, Baseball மட்டை உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இச்சம்பவத்தில் மூவர் கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் Gonesse மற்றும் Pitié-Salpêtrière மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்புகை வீசி அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.
காயமடைந்தவர்கள் 22, 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan