’தரைவழி இராணுவம்!’ - மீண்டும் வலியுறுத்தினார் ஜனாதிபதி மக்ரோன்!
17 பங்குனி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5273
உக்ரேனுக்கு தரைவழி இராணுவத்தினை அனுப்புவதை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தார்.
இரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் இரஷ்யாவை வெற்றிபெறச் செய்யாமல் விட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரான்ஸ், இறுதியாக தரைவழியா பிரெஞ்சு இராணுவத்தை அனுப்ப திட்டங்களை வகுத்து வருகிறது. இது தொடர்பாக நேற்று பரிசியன் (Le Parisien) ஊடகத்துக்கு ஜனாதிபதி மக்ரோன் வழங்கிய நேர்காணலில்
‘இரஷ்யாவுடனான யுத்தத்தை நான் விரும்பவில்லை. நான் முன் முயற்சி எடுக்கமாட்டேன். ஆனால் இரஷ்யப்படைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இரஷ்யப்படையை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். அதை நம்மால் செய்ய முடியும் என்பது தான் பிரான்சின் பலம்!” என தெரிவித்தார்.
அதேவேளை, “ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளும் எங்கள் வரிசையில் உள்ளன.” என்பதையும் தெரிவித்தார்.