Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

இலங்கையில் வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

18 பங்குனி 2024 திங்கள் 06:46 | பார்வைகள் : 2499


இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் உச்சம் கொடுப்பதால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதுல கருணாநாயக்க கூறினார்.

இதேவேளை, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது.

குருநாகலில் 38.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கொழும்பில் 33.9 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக அவ்வாறான போட்டி நிகழ்ச்சிகளை சில வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஆலோசனைகளை சில பாடசாலைகள் மீறுவதை ஊடகங்கள் வழியாக தாம் அறிவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்