அஜித் திரையுலகில் இருந்து விலகுகிறாரா?
18 பங்குனி 2024 திங்கள் 07:29 | பார்வைகள் : 6824
தளபதி விஜய் தற்போது 'கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ’தளபதி 69’ படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் திரையுலகில் இருந்து விலக இருப்பதாகவும் அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விஜய்யை அடுத்து அஜித்தும் தற்காலிகமாக திரையுலகில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அவர் ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களையும் முடிந்தவுடன் அஜித் உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அதனால் அவர் தற்காலிகமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் திரை உலகின் இரண்டு மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகிய இருவருமே திரையுலகில் இருந்து விலக இருப்பதாக வெளியான செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan