Paristamil Navigation Paristamil advert login

ரவா இட்லி

ரவா இட்லி

9 ஆவணி 2023 புதன் 15:38 | பார்வைகள் : 3177


ரவையை வைத்து தோசை சுடுவோம். ஆனால் ரவையை வைத்து சுவையான ரவா இட்லியை எளிமையாக செய்யலாம் தெரியுமா? 
தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - 1 துண்டு

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

கேரட் - 1 கப் ( துருவியது )

கொத்தமல்லி

பீன்ஸ் - ½ வெட்டியது

புளித்த தயிர் - 1/2 கப்

உப்பு

தண்ணீர் - 3/4

பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

செய்முறை :

முதலில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கியதும் பச்சை மிளகாய் , இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக வெட்டி வாய்த்த பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் துருவிய கேரட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். இறுதியாக உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து ஒரு கிளறு கிளறி அதன் பின்னர் சேமியா சேர்த்து மசாலா ரவையுடன் நன்கு சேரும் படி கிளறவும். கிளறும் போது தீவை நன்றாக குறைத்துவிட்டு பொறுமையாக கிளறுங்கள். சிறிது நேரத்தில் ரவை வேறுபடும் வாசம் வரும் அப்போது இறக்கி ஆற வைத்துக்கொள்ளுங்கள்.

அதன் பின்னர் கொஞ்சம் புளித்த தயிர் அல்லது கெட்டியான தயிர் சேர்த்து கலவையை நன்றாக கிளறி மூடி வையுங்கள். ஐந்து நிமிடம் களைத்து பார்த்தால் ரவை தயிரை உள்ளே இழுத்து ஊறி இருக்கும். தன பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மீண்டும் 10 நிமிடம் ஊறவிடுங்கள்.

அதன் பின்னர் எடுத்து அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி மாற்றிக்கொள்ளுங்கள். ஒரேடியாக தண்ணீர் ஊற்றாமல் சிறிது சிறிதாக சேர்ப்பது முக்கியம். பின்னர் எப்போதும்போல இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேகவைத்தால் சுவையான ரவா இட்லி ரெடி.இதற்கு பொருத்தமாக தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சுட சுட சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்