இலங்கை பாடசாலை மாணவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
18 பங்குனி 2024 திங்கள் 08:01 | பார்வைகள் : 2786
ஏப்ரல் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
வெப்பமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பல பாடசாலைகள் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டு விடுமுறையின் பின்னரும் முதலாம் தவணை தொடரும் என்பதால், அந்த நேரத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுத்தியுள்ளார்.
இதேவேளை, இன்று நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 39 முதல் 45 செல்சியஸ் வரை வெப்பநிலை நீடிக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.