Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் புறநகரில் தீவிபத்தில் 12 பேர் காயம்! - இருவர் கவலைக்கிடம்!

பரிஸ் புறநகரில் தீவிபத்தில் 12 பேர் காயம்! - இருவர் கவலைக்கிடம்!

18 பங்குனி 2024 திங்கள் 08:06 | பார்வைகள் : 8636


பரிசில் வடக்கு புறநகரான Villeneuve-la-Garenne (Hauts-de-Seine) இல் ஏற்பட்ட தீவிபத்தொன்றில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். 

நேற்று  ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளது. நகரசபைக் கட்டிடத்துக்கு அருகே  rue Gaston Appert வீதியில் உள்ள 12 அடுக்கு கட்டிடம் ஒன்றின் முதலாவது தளத்தில்  திடீரென தீ பரவியது. 

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். 28 தீயணைப்பு வாகனங்களும், 118 வீரர்களும் என களத்தில் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 

இச்சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்