பாகிஸ்தானின் விமானத் தாக்குதல் - 8 பேர் பலி
18 பங்குனி 2024 திங்கள் 10:06 | பார்வைகள் : 9339
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் இன்று நடத்திய வான்வழித் தாக்குதல்களால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் 18.03.2024 திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
அதாவது உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் சிறார்கள் எனவும் ஸபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.
வீடுகளை இலக்குவைத்து விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாவட்டத்தில் பொலிஸ் நிலையமொன்றின் மீது நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 படையினர் உயிரிழந்திருந்தனர்.
இத்தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிப் அலி ஸர்தாரி சூளுரைத்திருந்தார்.

























Bons Plans
Annuaire
Scan