Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்லாந்தில் சீற்றத்துடன் வெடித்து சிதறிய எரிமலை! 3 கிலோமீற்றருக்கு பூமியில் பிளவு

ஐஸ்லாந்தில் சீற்றத்துடன் வெடித்து சிதறிய எரிமலை! 3 கிலோமீற்றருக்கு பூமியில் பிளவு

18 பங்குனி 2024 திங்கள் 10:09 | பார்வைகள் : 2122


ஐஸ்லாந்தில் 4வது முறையாக எரிமலை வெடித்து சிதறியது. 

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிற்கு (Reykjanes) தெற்கே உள்ள ரெய்க்ஜேன்ஸ் (Reykjanes) தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 4வது முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளது. கடும் சீற்றத்துடன் வெடித்த எரிமலை, நெருப்புக்குழம்பை உமிழ்கிறது. 

மேலும் வெடிப்பினால் உண்டான புகை விண்ணை வான் அளவுக்கு பரவியதால், வானிலை மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. 

அத்துடன் சுமார் 2.9 கிலோமீற்றர் அளவுக்கு பூமியில் பிளவு ஏற்பட்டதாகவும், இது பிப்ரவரியில் கடைசியாக வெடித்த அதே அளவு எனவும் ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.  

பல வாரங்களாகவே ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு வெடிப்பு ஏற்படவுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போதைய எரிமலை வெடிப்பு குறித்து Nordic எரிமலை மையத்தின் தலைவர் ரிக்கே பெடெர்சென் கூறுகையில்,

''இது நிச்சயமாக எதிர்பார்க்கப்பட்டது. வெடிப்பின் சரியான நேரத்தை கணிக்க இயலாது. மேற்பரப்பை நோக்கி நகர்வதற்கான முதல் குறிப்புகள் உண்மையில் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே நடந்தன'' என அவர் கூறியுள்ளார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்