10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை! மருத்துவர்கள் ஆச்சரியம்
18 பங்குனி 2024 திங்கள் 10:12 | பார்வைகள் : 1728
சீனாவில் ஆண் குழந்தை ஒன்று 10 சென்டிமீற்றர் அளவு வாலுடன் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சீனாவில் வாலுடன் பிறந்த குழந்தை குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.
இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் முதுகுத்தண்டு இணைக்கப்படும்போது, பொதுவாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் (Tethered Spinal Cord) ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
மேலும், இது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. அது 5 அங்குல நீளம் வரை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.