€230, 000 யூரோக்களுடன் உக்ரேனியர் ஒருவர் கைது!
18 பங்குனி 2024 திங்கள் 13:51 | பார்வைகள் : 6684
€230,000 யூரோக்கள் பணத்துடன் உக்ரேனியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 14 திகதி வியாழக்கிழமை இச்சம்பவம் பிரான்சின் தெற்கு பகுதியான Narbonne (Aude) நகரில் இடம்பெற்றுள்ளது.
A9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்றை வழக்கமான சோதனை நடவடிக்கைகளுக்கான தடுத்து நிறுத்தினர். குறித்த நபர் உக்ரேனைச் சேர்ந்தவர் எனவும், அவரை சோதனையிட்டபோதும் மகிழுந்துக்குள் பணப்பொதி ஒன்று இருப்பதை காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
அதில் மொத்தமாக 230,650 யூரோக்கள் பணம் இருந்ததாகவும், அது தொடர்பான பூரண விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் சுங்கவரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரான்சில் 10,000 யூரோவுக்கு மேல் பணம் எடுத்துச் செல்லப்படும் போது சுங்கவரித்துறையினரின் அனுமதியுடன் எடுத்துச் செல்லப்படுதல் கட்டாயமானதாகும்.