Paristamil Navigation Paristamil advert login

Yvelines : பிரான்சில் இருந்து சீனாவுக்கு மரங்கள் கடத்திய மூவர் கைது!

Yvelines : பிரான்சில் இருந்து சீனாவுக்கு மரங்கள் கடத்திய மூவர் கைது!

19 பங்குனி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 4250


பிரான்சில் இருந்து சீனாவுக்கு சட்டவிரோதமாக மரங்கள் கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Yvelines மாவட்டதில் உள்ள சிறிய நகரமான Septeuil இல் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களின் மகன் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி சீனா உள்ளிட்ட பல சர்வதேச சந்தைகளுக்கு அனுப்பி உள்ளனர். 2021 ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற குற்றச்செயல்களின் ஈடுபட்டிருந்ததாகவும், மார்ச் மாத ஆரம்பத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் ஜொந்தாமினர் தெரிவித்தனர்.

oaks மரங்களையே அவர்கள் சட்டவிரோதமாக தறித்து, அதனை பொதிசெய்து அனுப்பியுள்ளதாகவும், மொத்தமாக €160,000 யூரோக்கள் மதிப்புள்ள மரங்களை அவர்கள் சீனாவுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் மீது வன பாதுகாப்பு அலுவலகம் (l'Office nationale des forêts) வழக்கு தொடுத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்